தல அஜீத் படத்தில் நடிக்க மறுக்கும் நஸ்ரியா... ஜான்வியும் ஒதுங்குகிறார்...

Advertisement

நேர் கொண்ட பார்வை படத்தையடுத்து தல அஜீத் நடிக்கும் 60 வது படம் வலிமை. எச்.வினோத் இயக்குகிறார். இவர் நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கியவர். போனிகபூர் படத்தை தயாரிக்கிறார்.

வலிமை படத்தின் தொடக்க விழா பூஜை சில தினங்களுக்கு முன் நடந்தது. வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் பற்றி வெவ்வேறு பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அஜீத்தின் தீவிர ரசிகையான நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

அவரும் தொடர்ந்து தனது இணைய தள பக்கத்தில் வலிமை படம் பற்றிய தகவல்களை பிரபலப்படுத்திக்கொண்டிருந்தார். அஜீத்துடன் நஸ்ரியா நடிக்கிறார் என்று கிசுகிசு பரவியதும் என்ன நினைத்தாரே அப்படியே பேக் அடிக்க தொடங்கிவிட்டார். வலிமை படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த நஸ்ரியா கடந்த ஆண்டு 'கூடே' என்ற மலையாளம் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தற்போதும் டிரான்ஸ் உள்ளிட்ட 2 படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் அஜீத் படத்தில் நடிக்க மறுத்திருப்பது ஏன் என்பது புரியவில்லை என்கின்றனர். சிறப்பு கதாபாத்திரத்தில் ஜான்வி நடிப்பார் என்று மற்றொரு தகவல் வெளியானது அவரோ தென்னிந்திய படங்களில் தற்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்று ஒதுங்கியிருக்கிறார்.

தல ரசிகை நஸ்ரியா, தயாரிப்பாளர் போனி கபூர் மகள் ஜான்வி இருவருமே நடிக்க மறுப்ப தால் வேறு ஹீரோயினை தேட வேண்டிய நிலைக்கு படக் குழு தள்ளப்பட்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>