சூர்யாவின் சூரறைப்போற்று பர்ஸ்ட்லுக் அப்டேட்.. ஏர் டெக்கான் நிறுவனர் வாழ்க்கை கதையாக உருவாகிறது

by Chandru, Oct 28, 2019, 22:48 PM IST

காப்பான் படத்தையைடுத்து சூர்யா நடிக்கும் படம் சூரறைப்போற்று. மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொன்கரா இயக்குகிறார். இப்படத்தை பற்றிய அப்டேட் விவரங்களை பட தரப்பு பகிர்ந்துள்ளது. சூரறைப்போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூரறைப்போற்று படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஆர்.கோபிநாத் வாழ்க்கை சரித்திரத்தை மையாக வைத்து உருவாகிறது. சூர்யா ஹீரோவாக நடிக்கும இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

இவர்களுடன் ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், மோகன்பாபு, கருணா நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.


Leave a reply