விஷால் தமன்னா நடித்துள்ள ஆக்‌ஷன் பட டிரெய்லர் ரிலீஸ்... துருக்கியில் படமான அதிரடி சண்டை காட்சிகள்..

Vishal and Tamana nail stunts in Sundar Cs film

by Chandru, Oct 29, 2019, 20:55 PM IST

ஆம்பள படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ஆக்‌ஷன். தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு துருக்கியில் நடந்துள்ளது. பெரும் பாலான காட்சிகள் அங்கு படமாக்கப் பட்டுள்ளன. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தயாரிப்பு டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன்.

ஆக்‌ஷன் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி கோலிவுட்டில் அதிகம் பேசப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஆக்‌ஷன் காட்சிகள், சண்டை காட்சிகள் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது என்று டிரைலரில் அறிவிக்கப்படுகிறது.

You'r reading விஷால் தமன்னா நடித்துள்ள ஆக்‌ஷன் பட டிரெய்லர் ரிலீஸ்... துருக்கியில் படமான அதிரடி சண்டை காட்சிகள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை