யஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2ம் பாகமும் 2வது குழந்தையும்... சக நடிகர்கள், ரசிகர்கள் வாழ்த்து..

KGF star Yash welcome their second child a baby boy

by Chandru, Oct 30, 2019, 21:51 PM IST

யாரும் எதிர்பாராத வகையில் கேஜிஎஃப் படம் மூலம் திடீரென்று பிரபலமானார் யஷ்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் தயாராகி வருகிறது. பிரஷாந்த் நீல் இயக்குகிறார். ஹீரோ யஷ் கன்னட திரைப்பட உலகில் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படுகிறார். தற்போது அவர் நடித்து வரும் கேஜிஎஃப் 2ம் பாகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ராதிகா பண்டித் என்பவரை மணந்தார் யஷ். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ராதிகா பண்டிட்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சக நடிகர்கள், ரசிகர்கள் யஷ் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதுடன் விரைவில் வெளிவரவிருக்கும் கேஜிஎஃப் 2 வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை