பருத்தி வீரன் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆன நடிகர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் தன் தந்தைக்கு கோவில் கட்டியுள்ளார்.
சொந்த ஊரான சேலம் மாவட்டம் வடக்காடு கிராமத்தில் விநாயகர், வீரமுனி ஆகியோருக்கு கோவில் கட்டி உள்ளார். அதனுடன் சாமி சிலைகளுக்கு அருகில் தன் தந்தைக்கும் சிலை எழுப்பி உள்ளார். இதன் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
இதுகுறித்து சரவணன் கூறியதாவது: காலத்துக்கும் அப்பா, அம்மா நினைவாக இருக்கட்டும் என அவர்கள் வாழ்ந்த வீட்டை விற்று, வாங்கின நிலத்தில் இந்தக் கோவிலை எழுப்பியிருக்கேன். வீரமுனி பீடத்தின் பக்கத்துலேயே அப்பாவுக்கும் சிலை எடுத்திருக்கிறேன். என்னுடைய அப்பா ஒரு போலீஸ் அதிகாரி.
அதனால் அவர் உருவத்தை அய்யனாராக செதுக்கி சிலையை செய்துள்ளேன். என்னுடைய அப்பா அம்மாவுக்கு அவர்கள் உயிரோடு இருந்தவரை நான் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கு பரிகாரமாக இதனை செய்துள்ளேன்
இவ்வாறு சரவணன் கூறினார்,