சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1982 ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தனிக்காட்டு ராஜா. 37 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தில் ரஜினியுடன் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை. சுரேஷ் புரொடக்ஷன் சார்பில் டி.ராமநாயுடு தயாரித்திருந்தார்.
தென்னூர், வடக்கனூர் என்ற இரு கிராமத்துக்குள் இருக்கும் பல வருட பகையை வடக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த படித்த இளைஞனான ரஜினி எப்படி முடித்து வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை.
பாட்டு, பைட்டு செண்டிமெண்ட் என மாஸ் படமாக உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் வடக்கனூர் இளைஞனாக ரஜினியும், தெக்கனூர் இளைஞனாக கமலும் நடிப்பதாக இருந்தது. கமல் படத்தில் இருந்து விலகி கொள்ளவே அவருக்கு பதிலாக விஜயகுமார் நடித்தார்.
தற்போது இந்தப் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு வெளிவர இருக்கிறது. வி.சி. குகநாதன் மேற்பார்வையில் பிலிம் விஷன் ராமு வெளியிடுகிறார். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி வெளிவரும் என்று தெரிகிறது.