ஐஸ்வர்யராயின் மேனேஜரை காப்பாற்றிய ஷாருக்கான்.. அமிதாப் வைத்த தீபாவளி  விருந்தில் பரபரப்பு

by Chandru, Oct 31, 2019, 18:55 PM IST
தீபாவளியை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
ஷாருக்கான், கரண் ஜோஹர், துல்கர் சல்மான் போன்ற  பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஐஸ்வர்யாராயிடம் பல வருடங்களாக மேனேஜராக பணிபுரிந்த அர்ச்சனா சதானந்தாவும் தனது மகளுடன் கலந்து கொண்டார். அதிகாலை 3 மணி அளவில் குறைந்த நபர்களே விருந்து கொண்டாடிய ஹாலில் இருந்தபோது அங்கே ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபம் ஒன்றிலிருந்து அர்ச்சனா அணிந்திருந்த லெகங்கா உடையில் தீப்பற்றியது.
 
சில நொடிகளில் துணியில் தீ பரவியது அதைகண்டு அதிர்ச்சி அடைந்த  ஷாருக் கான் உடனடியாக செயல்பட்டு தனது கோட்டை கழற்றி தீயை அணைத்தார். இதில் அர்ச்சனாவின் கையிலும், வலது காலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. ஷாருக்கானுக்கும் கூட சிறிய காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a reply