ரஜினிக்கு மரியாதைக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது...மத்திய அரசு அறிவிப்பு...

Rajinikanth To Be Honoured Lifetime Achievement Award At IFFI

by Chandru, Nov 2, 2019, 17:27 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனையாளர் மரியாதைக்குரிய சிறப்பு விருதினை இன்று அறிவித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகர் தெரிவித்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:
கோவாவில் சர்வதேச வரும் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை 50 வது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. மொத்தம் 76 நாடுகளிலிருந்து 26 பொழுதுபோக்கு படங்கள் 15 சமூக படங்கள் மற்றும் 20 சிறந்த திரைப்படங்கள், குழந்தைகளுக்கான 12 படங்களும் திரையிடப்படுகின்றன. இவ்வற்றில் தேர்வு செய்யப்பட்ட தமிழ், இந்தி உள்ளிட்ட மாநில மொழிப்படங்களும் திரையிடப்படுகின்றன. இந்த விழாவில் ரஜினிகாந்த்துக்கு திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனையாளர் மரியாதைக்குரிய சிறப்பு விருது வழங்கப்படுகிறது. அதனை ரஜினிகாந்த் நேரில் பெற்றுக்கொள்கிறார்.
சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மேசேஜில்,'சர்வதேச இந்திய திரைப்பட பொன் விழா ஆண்டில் மரியாதைக்குரிய விருதினை எனக்கு அளித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என ரஜினிகாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.
சர்வதேச இந்திய திரைப்பட குழுவினருக்கும் இந்த தனது நன்றியை பகிர்ந்திருக்கிறார்.
ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். கே.பாலசந்தர் இவரை அறிமுகப்படுத்தினார். கடந்த 44 ஆண்டுகளில் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம் என 167 படங்கள் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 168 படமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். 1975ம் ஆண்டு ஆபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் டைரக்டர் கே.பாலசந்தர் அவரை நடிராக அறிமுகப்படுத்தினார்.
ரஜினிக்கு கடந்த 2000ம் ஆண்டில் பத்மபூஷண் விருதும், 2016ல் பத்மவிபூஷண் விருதும் மத்திய அரசு வழங்கியது. மேலும் தமிழக அரசின் கலைமாமணி (1984), எம்ஜிஆர் விருது(1989), எம்ஜிஆர்-சிவாஜி விருது (2011) வழங்கப்பட்டது. அதேபோல் மகாராஷ்டிரா அரசு ராஜ்கபூர் விருது (2007), ஆந்திர அரசின் என்டிஆர் தேசிய விருது (2016) பெற்றிருக்கிறார். தவிர பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு சினிமா இதழ், அமைப்புகள் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் (1978), மூன்றுமுகம் (1982) படங்களுக்கு தமிழக அரசின் சிறப்பு விருதும், முத்து (1995), படையப்பா (1999), சந்திரமுகி (2005), சிவாஜி (2007) ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதினையும் தமிழக அரசிடமிருந்து பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த்.

You'r reading ரஜினிக்கு மரியாதைக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது...மத்திய அரசு அறிவிப்பு... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை