சினிமா தியேட்டரில் டிக்கெட் விற்ற விஜய்தேவரகொண்டா.. தான் நடித்த படத்துக்காக களத்தில் குதித்தார்..

by Chandru, Nov 2, 2019, 17:44 PM IST
Share Tweet Whatsapp
கடந்த சில ஆண்டுகளாகவே ஹீரோ, ஹீரோயின்கள் தங்கள் படங்களை வெவ்வேறு பாணியில் புரமோஷன் செய்து ரசிகர்களை கவர்கின்றனர்.
நோட்டா பட ஹீரோ விஜய் தேவரகொண்டா தன்னுடைய படம் ஒவ்வொன்றொன்றும் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ஐஸ் கிரீம் வண்டிகளை ஏற்பாடு செய்து தெருக்தெருவாக சென்று இலவசமாக மக்களுக்கு தருகிறார்.
 
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்த தெலுங்கு படம் மீக்கு மாத்ரமே செப்தா படம் நேற்று வெளியானது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டருக்கு சென்று டிக்கெட் கவுன்ட்டரில் உட்கார்ந்து ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்தார்.
 
டிக்கெட் வாங்கிய எல்லோருக்கும் இலவசமாக பாப்கார்ன் கொடுத்தார் விஜய். டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் கவுன்டரில் விஜய்தேவரகொண்டா இருப்பதை கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

Leave a reply