சிகரெட் பிடிக்கும் நஸ்ரியா கொந்தளிக்கும் ரசிகர்கள்...கணவருடன் நடிக்கும் படத்தில் வில்லங்கம்...

by Chandru, Nov 4, 2019, 15:59 PM IST
நேரம் படத்தில் சராசரி பெண்ணாக நடித்து கவர்ந்த நஸ்ரியா அடுத்தடுத்து படங்களிலும் சினிமாத்தனம் இல்லாத இயல்பான நடிப்பால் மனதை கொள்ளை கொண்டார்.
நல்ல நடிகையாக இருக்கிறரே சீக்கிரமே நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிடுவார் என்று பேச்சு பரவி வந்த நிலையில் திடீரென்று மலையாள நடிகர் பஹத் பாசிலை மணந்து செட்டிலானார். நீண்ட இடை வெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் நஸ்ரியா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.
கணவர் பஹத் பாசில் உடன் இணைந்து டிரான்ஸ் என்ற புதியபடத்தில் நடித்திருக்கிறார் நஸ்ரியா. அன்வர் ரஷீத் இயக்கி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைலில் சிகரெட் புகைத்தபடி நடந்து வருவது போல் போஸ் அளித்த ஸ்டில் இடம் பெற்றிருந்தது. அதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியும், கொதிப்பும அடைந்தார்கள்.
சிகரெட் பிடிப்பது நஸ்ரியாதானா என்ற அந்த படத்தை ஜூம் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்டமாக நஸ்ரியா சிகரெட் புகைத்த அனுபவம்பற்றி பேட்டி அளிக்கும்போது மற்றொரு அதிர்ச்சி ரசிகர்களுக்கு தருவார் என்கிறது படக்குழு.


More Cinema News