பிகில்- கைதி சென்னையில் மட்டும் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?... மகிழ்ச்சியில் விநியோகஸ்தர்கள்...

Bigil and Kaithi box office collection in Chennai: Day 10

by Chandru, Nov 4, 2019, 15:42 PM IST

தீபாவளி ரிலீஸாக விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்டி நடித்த கைதி படங்கள் வெளியானது. விஜய், அட்லி, ஏஆர் ரஹ்மான், நயன்தாரா என மெகா கூட்டணியில் வெளியான பிகில் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

ஆனால் கைதி படம் தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸானது. தொடக்கத்தில் ஏறுமுகத்தில் இருந்த பிகில் 3வது நாட்கஉக்கு பிறகு இறங்கு முகத்தை சந்தித்தது. அதேசமயம் முதல் நாளில் குறைவான வசூலை பார்த்த கைதி படம் அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்தது.

இதனால் கைதி படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன. இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவை எவ்வளவு வசூல் செய்திருக்கின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் பிகில் படம் கடந்த 10 நாட்களில் 10.07 கோடி ரூபாயும். கைதி படம் 2.79 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. கைதி படத்தின் தியேட்டடர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதால் கைதி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
இதையடுத்து படம் வெளியிட்ட விநியோகஸ் தர்கள் லாபம் பார்த்து மகிழ்ச்சியில் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை