”கைதி 2” டில்லி மறுபடியும் வருவான்.. உறுதி செய்த கார்த்தி...

Karthi confirms Kaithi 2 with Lokesh Kanagaraj

by Chandru, Nov 4, 2019, 19:26 PM IST

கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள கைதி சக்கைபோடுபோடுகிறது. நரேன், ஹரிஷ் உத்தமன், ரமணா, ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது கண்டிப்பாக வரும் அதற்கேற்ப படத்தின் கிளை மாக்ஸும் அமைந்திருந்தது என்று கூறியிருந்தார்.

மேலும் நடிகர் கார்த்தியிடம் 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும் கைதி 2ம் பாகத்தை உருவாக்கி விடலாம் என்வும் தெரிவித்தார்.

இந்நிலையில் கார்த்தியும் கைதி 2ம் பாகம் வரும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
அன்பான எனது சகோதர, சகோதரிகளே எனது ஏற்றத்திலும் தாழ்விலும் எனக்கு துணையாக இருந்திருக்கிறீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து கடினமான உழைப்பை நான் தருவேன்.
டில்லி (கைதி கதாபாத்திரம்) மீண்டும் வருவான்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை