நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்.... இஷாகோபிகர் பரபரப்பு புகார்...

நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா என் சுவாசக் காற்றே  போன்ற படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் இஷா கோபிகர்.  நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து மும்பையில் அவர் கூறியதாவது:

தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து பிரபல நடிகரின் பெயரைச் சொல்லி, அவரிடம் பேசுங்கள் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும், அவரிடம் நல்லபெயர் வாங்கிவிட்டால் நிறைய பட வாய்ப்புகள் வரும், நீங்கள் பெரிய நடிகையாகிவிடலாம் என்றார். நானும் அந்த நடிகரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் என்னிடம் தனது தினசரி பணிகள்பற்றி கூறினார்.

அதிகாலையில் எழுந்து ஜிம்மிற்கு சென்றுவிடுவேன், அதனால் டப்பிங் தியேட்டருக்கு வா அங்கு இடைவேளையில் பேசலாம் என்றதுடன், யாருடன் வரப்போகிறாய் என்றார். டிரைவருடன் வருகிறேன் என்றேன். யாருடனும் வேண்டாம் தனியாக வா. நான் ஒன்றும் 15 வயது 16 வயது பையன் இல்லை என்றார். அவர் எதற்காக என்னை தனியாக வரச்சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். உடனே நான் இன்றைக்கு வேறு வேலை இருக்கிறது அதனால் நாளை வருகிறேன் என்று சொல்லி விட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டேன்.

நடிகரிடம் என்னை பேச்சொன்ன தயாரிப்பாளருக்கு போன் செய்து, எனது திறமைக்காகத்தான் வாய்ப்பு தரவேண்டும், வேறு எதற்காகவும் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வரும் நடிகை நான் இல்லை என்றேன். பின்னர் அந்த நடிகருடன் ஒருபோதும் நான் நடிக்கவில்லை.

பிரபல  நடிகர்களின் செகரட்ரிகள் அதிக உரிமை எடுத்துக்கொண்டு என்னை தவறான இடங்களில் தொட்டு பேசுவார்கள். அதுபோன்ற நபர்களிடமிருந்து என்னை தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டேன். இந்த சம்பவங்களுக்கு பிறகு  எனக்கு பட வாய்ப்புகள் வரும்போதெல்லாம் அந்த வாய்ப்பு என்னை விட்டு நழுவி வேறு நடிகைக்கு சென்றுவிடும். குறிப்பிட்ட நடிகரின் உறவுப் பெண்ணுக்கு அந்த வாய்ப்பு சென்றிருக்கும். இதனால் நிறைய பட வாய்ப்புகளை நான் இழந்திருக்கிறேன்.

இவ்வாறு இஷா கோபிகர் கூறினார். படுக்கைக்கு அழைத்தவர் யார் என்று நடிகரின் பெயரை சொல்ல மறுத்துவிட்டார் இஷா கோபிகர்.

Advertisement
More Cinema News
kaarthi-jothikas-film-titled-thambi
ஜோதிகா-கார்த்தி நடிக்கும் ”தம்பி”..    பட போஸ்டர் சூர்யா வெளியிட்டார்..
hero-film-release-production-company-statement
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு தடையா? பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்..
vishal-and-shraddha-srinath-s-next-film-chakras-first-look
3 ஹீரோயினுடன் விஷாலின் சக்ரா யுவன் சங்கர் ராஜா இசை..
vijay-sethupathis-sanga-thamizhan-faces-a-last-minute-glitch
சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகவில்லை.. வருத்தத்தில்  விஜய்சேதுபதி...
director-pa-ranjith-issues-statement-on-the-suicide-of-iit-student-fathima-latheef
கல்வி நிறுவன தற்கொலைபற்றி கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் கவலை.. பாகுபாடு காட்டி கொல்வது தொடர் கதையாகிறது..
vishals-action-gets-a-solo-release
தனிகாட்டு ராஜாவாக களமிறங்கிய விஷால்... 4 வது வார ரேஸில் பிகில், கைதி ...
is-amala-paul-out-of-ponniyin-selvan
சரித்திர படத்திலிருந்து அமலாபால் ரிஜெக்ட்...காரணம் என்ன தெரியுமா..?
dhanush-recomands-suriya
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா...புதிய காம்பினேஷனால் உற்சாகம்...
thala-fans-try-to-trend-visvasam-title
அஜீத் விஸ்வாசம் டைட்டில் தெறிக்க விட்ட ரசிகர்கள்.. பதறிப்போன டிவிட்டர் நிர்வாகம்...
thalaivar-darbar-dubbing-starts-today
தர்பார் படத்துக்கு ரஜினி டப்பிங் தொடக்கம்..அப்டேட் செய்த முருகதாஸ்...
Tag Clouds