பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.
இவரும் நடிகை திரிஷாவும் வருடக்கணக்கில் டேட்டிங் செய்து வந்தனர். இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யவிருப்ப தாகவும் சில வருடங்களுக்கு முன் தகவல் பரவியது. அது புஷ்வாமானது. ராணாவுடன் நட்புமுறையில்தான் பழகினேன் என்று திரிஷா விளக்கம் அளித்தார்.
அதன்பிறகு தமன்னாவுடன் இணைத்து ராணா கிசுகிசுக்கப்பட்டார். தமன்னாவும் எங்களுக்கு காதல் இல்லை என்று நழுவினார். இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங், ராணா காதலிப்பதாக சில காலமாக கிசுகிசு பரவியது. தற்போது ரகுலும் ராணவை காதலிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இதை பற்றி ரகுல் ப்ரீத் சிங் கூறும்போது, "எங்கள் இருவரது வீடும் மிக அருகில் தான் உள்ளது. நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராணாவை தெரியும். நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். நான் சிங்கிள் தான். இதுவரை யாரையும் காதலித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.