களத்தூர் கண்ணம்மா படம் மூலம் சிறுவனாக நடிக்க வந்தார் கமல். அன்று தொடங்கிய பயணம் இன்றுவரை தொடர்கிறது. சப்பாணி முதல் இந்தியன் தாத்தா, விஸ்ரூபம் வரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து உலகநாயகனாக வலம் வருகிறார்.
இனியொரு வேடம் இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல்.
கலையுலகில் கமலின் 60 ஆண்டு அயராத பணிக்கு விழா எடுக்கப்படுகிறது. நாளை 7ம் தேதி கமலின் பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது. அத்துடன் தொடங்கும் விழா 8 மற்றும் 9ம் தேதிவரை நடக்கிறது. இவ்விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
கமல் 60 விழாவுக்கான அழைப்பிதழை முக்கிய சினிமா பிரமுகர்களுக்கு வழங்குவதற்காக ஓவியர் ஏபி ஸ்ரீதர் புதுவகை டிசைனில் வடிவமைக்கிறார். அதாவது கமலின் பல்வேறு வித தோற்றத்தில் அவருடன் அந்த விஐபி இருப்பதுபோல் அழைப்பிதழ் அச்சிடப்படுகிறது.
கமலின் பல வடிவங்கள் வரையப்பட்டு அத்துடன், இளையராஜா, ரஜினி, விஜய், அஜீத் போன்ற திரைக்கலைஞர்கள் சேர்ந்து இருப்பதுபோன்று டிசைன் செய்யப்படுகிறது.