சியான் விக்ரம் மகன் நடித்த ஆதித்ய வர்மா ரிலீஸ் தள்ளி வைப்பு...காரணம் பிகில், கைதியா...?

by Chandru, Nov 7, 2019, 18:00 PM IST
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. இப்படம் நவம்பர் 8ம் தேதி (நாளை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 21ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கிரிசயா இயக்கி உள்ளார்.
பனிதா சந்து, பிரியா ஆனந்த் ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். தணிக்கையில் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சக்கைபோடு போட்டு வசூல் சாதனை புரிந்தபடம் அர்ஜுன் ரெட்டி. இப்படம்தான் தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. முன்னதாக இதே படத்தை இயக்குனர் பாலா தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார். துருவ் ஹீரோவாக நடித்தார். அப்படம் திருப்தி இல்லாததால் முழுபடமும் தூரமாக தூக்கி வைக்கப்பட்டு தற்போது இயக்குனர் கிரிசயா, ஆதியா வர்மாவை இயக்கி உள்ளார்.
விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் விக்ரம் ரசிகர்கள் பெரிய அளவில் இப்படத்தை எதிர்பார்த்திருக் கின்றனர். ஆனால் படம் தள்ளிவைக்கப்பட்டது அவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தீபாவளியையொட்டி விஜய் நடிப்பில் வெளியான பிகில், கார்த்தி நடித்த கைதி படங்கள் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக் கிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வார இறுதியில் மீண்டும் அப்படம் 2ம் கட்ட வசூலை கல்லா கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஆதித்யா வர்மா வசூலை பாதித்துவிடக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வும் படம் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜெய் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியுள்ள கேப்மாரி மற்றும் மிக மிக அவசரம், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். போன்ற படங்கள் நாளை ரிலீசாகும் என்று தெரிகிறது.


Speed News

 • சமயத் தலைவர்களுடன் 

  தலைமை செயலர் ஆலோசனை

  கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். 

  Jun 3, 2020, 14:46 PM IST
 • சென்னை ராயபுரத்தில் 
  3 ஆயிரம் பேருக்கு கொரோனா
   
  சென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில்  3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு:   கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை -  2,007, திரு.வி.க.நகர் -  1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் -  910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278
  ஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279
   

   
  Jun 3, 2020, 14:42 PM IST
 • டெல்லி அரசில் சம்பளம்

  போட பணம் இல்லை..

  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார். 

  May 31, 2020, 14:10 PM IST
 • தொழிலாளர்களுக்கு எவ்வளவு

  கொடுத்தீர்கள்.. கபில்சிபல் கேள்வி

   

  காங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள்? இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்

  May 31, 2020, 14:07 PM IST
 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST