ஆடை இல்லாமல் மலரில் மூழ்கி குளித்த  அமலாபால்... உடைகள் மீது ஏன் இந்த வெறுப்பு...?

by Chandru, Nov 7, 2019, 17:48 PM IST
Share Tweet Whatsapp
நடிகை அமலாபால் ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. ஆனால் அமலாபால் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்ததுபோல் நடிக்க இந்தி நடிகைகள் தயக்கம் காட்டுகிறார்களாம். இதனால் ஹீரோயினை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அமலாபால் புதிய படமொன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தண்ணீர் நிரம்பிய தொட்டியொன்றில் முழுவதிலும் பூக்கள் மிதந்துக்கொண்டிருக்க பூக்களுக்கு நடுவே ஆடை எதுவும் இல்லாமல் ஒய்யாரமாக குளியல்போட்டுக்கொண்டிருக்கு கிறார். இது என்ன வகையான குளியல் என்றதற்கு இதுவொரு பூ தெரபி குளியல். உடல் ஆரோக்கியம், புத்துணர்ச்சிக்காக இயற்கை முறையிலான குளியல் என பதில் அளித்திருக்கிறார்.
இந்தோனேஷியாவில் அமலாபாலின் ஆடையில்லாத இந்த ஆரோக்கிய பூ குளியலை ரசிகர்கள் பலரும் லைக் செய்திருக்கும் நிலையில் சிலரோ,  ஆடை என்றால் உங்களுக்கு பிடிக்காதா .உடைகள் மீது ஏன் இந்த வெறுப்பு, ஆடை இல்லாமல் அடிக்கடி வருகிறீர்களே எனவும் கேட்டிருக்கின்றனர்.

Leave a reply