இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆரம்பகாலகட்ட படங்கள் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்போட்டை போன்ற படங்கள் ரசிகர்களால் தலைமேல் வைத்து கொண்டாடப்பட்டன.
ஆனால் அந்த மவுசு ஏனோ அடுத்தடுத்த படங்களுக்கு இல்லாமல் போனது. தமிழில் 4 வருட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அதேபோல் மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களும் எதிர்ப்பார்ப்புக் குள்ளாகியிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை அப்படங்கள் ஈடுசெய்யவில்லை.
மறுபடியும் பெரிய இடைவெளியாக 6 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் என்ஜிகே படம் உருவானது. வழக்கமான அவரது பாணியிலிருந்து மாறுபட்டிருந்த இப்படம் ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் அரசியல் டச்சுடன் புதிய கோணத்தில் இப்படத்தை தந்திருந்தார். மற்ற எல்லா படங்களில் கிடைத்த ஆதரவைவிட செல்வராகவனுக்கு பெரியதொரு தொடர்பை திரையுலகிலும், சமூக ஊடகங்களிலும் ஏற்படுத்தித்தந்தது.
இன்றைக்கும் அவர் வாசம்போகாத மலராக மணம வீசிக்கொண்டிருக்கிறார் செல்வராகவன். அடுத்து புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன், ' திரைக்கதை எழுதும் பணி தொடங்கியது. இதைவிட பெரிய இன்பம் இல்லை. முற்றிலும் அமைதியில் ... என தனது பணிபற்றி விவரித்திருப்பதுடன் லேப்டாப் புகைப்படத்தையும் அருகில் புத்தர் சிலையும் உள்ளதுபோல பதிவை வெளியிட்டிருக்கிறார். இது புதுப்பேட்டை 2வா அல்லது புதிய படமா என்று செல்வராகவனிடம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.