கமலுக்கு ரஜினி வாழ்த்து... தந்தை சிலையை திறந்து வைத்து பரவசம்..

by Chandru, Nov 7, 2019, 17:28 PM IST
Share Tweet Whatsapp

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

கமலின் 60 ஆண்டு திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக 3 நாள் விழா அவரது பிறந்த நாளான இன்று முதல் தொடங்கி 3 நாட்களுக்கு நடக்கிறது. 3 நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று தனது தந்தை டி.சீனிவாசனின் சிலையை பரமக்குடியில் கமல் திறந்து வைத்தார்.

இதில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், நடிகை சுஹாசினி, கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் மற்றும்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இதில் கமல் உள்ளிட்ட அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இதுவொரு குடும்பபாங்கான உருக்கமான நிகழ்வாக அமைந்தது. கமல் பிறந்தநாளான இன்றைய தினம்தான் அவரது தந்தை சீனிவாசன் நினைவு தினமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கமலை தொலைபேசியில் தொடர்புகொண்டு ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.


Leave a reply