கமலை தமிழ் கவிதையால் வாழ்த்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்... சினிமா என்னும் துறுவை... துரத்தி சிறகு செதுக்கிய பறவை...

by Chandru, Nov 7, 2019, 18:26 PM IST
Share Tweet Whatsapp
கமல்ஹாசனுக்கு இன்று 65வது பிறந்தநாள். அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்து மொழி சினிமா பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கமல்ஹாசனுக்கு கவிதை நடையில் வாழ்த்து கூறி உள்ளார்.
 
'சினிமா என்னும் துறவை
துரத்தி சிறகு செதுக்கிய பறவை
உங்கள் அறுபத்து ஐந்து அகவை
எமக்கு விஸ்வரூப உவகை.
களிப்புற்றோம் காணீர்!
காலம் இருக்கட்டும் உம் பெயர் சொல்லி!
 
என கவிதையில் வாழ்த்தியிருக்கும் ஹர்பஜன்,'கமல் அண்ணா உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி' என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய நிகழ்வுகளின்போது கமல் கவிதை வடிவில் தனதுகருத்துக்களை வெளியிடுவார்.
 
தூய தமிழில் எழுதப்படும் அக்கவிதைகளை புரிந்துகொள்வதற்க சற்று கடினமாகவே இருக்கும். அவரது பாணியில் ஹர்பஜன் சிங் வாழ்த்து கூறியிருப்பதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

Leave a reply