பொம்மை குதிரையில் கத்தி சண்டைபோடும் காஜல்... மகதீரா ஞாபகமா அம்மணி...

by Chandru, Nov 7, 2019, 18:44 PM IST
Share Tweet Whatsapp
நடிகை காஜல் அவர்வால் தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் களறி சண்டை மற்றும் வர்ம கலை பயிற்சி பெற்றார். இந்தியன் முதல் பாகத்தில் வயதான வேடத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த வேடத்தைத்தான் 2ம்பாகத்தில் காஜல் ஏற்றிருப்ப தாக கூறப்பட்டது. ஆனால் வயதான கேரக்டரில் அவர் நடிக்கவில்லை என்று தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
 
களறி சண்டை பயிற்சி பெற்றதன் எதிரொலியோ என்னவோ வித்தியாசமான வீடியோ ஒன்றை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தைகள் அமர்ந்து விளையாடும் பொம்மை குதிரை மீது உட்கார்ந்திருக்கும் காஜல், கத்தி சண்டைசெய்வதுபோல் பாவனை செய்துள்ளார்.
 
நான் எனது சொந்த சண்டை செய்கிறேன்” எனவும் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.
காஜலின் இந்த சேட்டையை பார்த்த ரசிகர்கள் மகதீரா படத்தில் கத்தி சண்டை போட்ட ஞாபகமா அம்மணி என கேட்டுள்ளனர்.
 
கமல்ஹாசனுடன் இந்தியன் 2வில் நடிக்கும் காஜல் அகர்வால் அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக் களை தெரிவித்திருப்பதுடன் இன்று பிறந்த நாள் காணும் அனுஷ்காவுக்கும் வாழ்த்து கூறி உள்ளார்.

Leave a reply