நடிகை சாய்பல்லவி படத்துக்கு திடீர் எதிர்ப்பு...பாபர் மசூதி இடிப்பு கதையில் நடித்துள்ளாரா?

by Chandru, Nov 8, 2019, 17:26 PM IST
Share Tweet Whatsapp
நடிகை  சாய்பல்லவி வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பார் என்பதை பேச்சை மாரி 2 படத்தில் உடைத்தார். ரவுடி பேபி பாடலுக்கும், வட சென்னை குத்து பாட்டுக்கும் ஆடி  லோக்கல் கதாபாத்திரத் திலும் நடிப்பேன் என்பதை வெளிப்படுத்தினார்.
அதேசமயம் மாறுபட்ட வேடங்கள் வரும்போது அதற்கு முக்கியத்துவம் தருகிறார். தற்போது தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992 ,  நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் விரத பர்வம் 1992ல் சாய் பல்லவி ஏற்றிருக்கும் பாத்திரம் இவரா இத்தகைய பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்று ஆச்சர் யப்பட வைத்திருக்கிறாரம்.
 
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடிக்க, நாட்டுப்புற பாடகியாக இருந்து பின்னர் நக்சலைட்டாக மாறும் வேடத்தில் நடித்திருக்கிறார் சாய்பல்லவி.  சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்க பெரும்பா லான ஹீரோயினகள் தயங்குவார்கள்.  ஆனால் சாய்பல்லவி கதையைக் கேட்டதும்  நடிக்க சம்மதித்தாராம்.  
 
வேணு உடுகுலா இயக்கும் இந்த படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னை களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதையடுத்து  விரத பர்வம் 1992 படம் பரபரப்பு வளையத்திற்குள் சிக்கியிருக் கிறது. இப்போதே படத்தை திரையிட்டுக் காண்பித்த பிறகே திரையிட அனுமதிப்போம் என சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். மேலும் சில அமைப்பினர் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
 
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் திரைப்ப டங்களில் பாபர் மசூதி இடிப்பு குறித்து காட்சிகள் அமைக்கப்படுவதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித் துள்ளனர்.
 
திடீரென சர்ச்சைகளை சந்தித்துள்ள விரத பர்வம் 1992 படம் தடைகளைத் தாண்டி வெளியாகுமா என்று சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a reply