நடிகர் தென்னவன் மருத்துவமனையில் அனுமதி...

by Chandru, Nov 8, 2019, 17:33 PM IST
Share Tweet Whatsapp
என் உயிர்தோழன், ஜெமினி, ஜே ஜே, திவான், சண்டகோழி, கூடல் நகர், வாகை சூடவா, சுந்தரபாண்டியன், மாங்கா, கத்தி சண்டை, சண்டகோழி 2 போன்ற பல படங்களில் வில்லன் குணசித்ர வேடங் களில் நடித்திருப்பவர் தென்னவன் (52).
மூளையில் ஏற்பட்ட பாதிப்பையடுத்து தென்னவன் உடல்நிலை மோசமானது. இதையடுத்து சென்னை அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தென்னவன் குடும்பத்தினர் உடனிருந்து அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Leave a reply