தியேட்டர் குறைந்ததால் தள்ளிப்போன ஸ்ரீபிரியங்கா படத்துக்கு தீர்வு...7 தியேட்டர் ரிலீஸ், 125 தியேட்டர் ஆனது...

by Chandru, Nov 8, 2019, 17:53 PM IST
Share Tweet Whatsapp
நடிகை ஸ்ரீபிரியங்கா நடித்துள்ள படம் மிக மிக அவசரம, அரிஷ்குமார் ஹீரோ. சுரேஷ்காமாட்சி தயாரித்து, இயக்குகிறார். இப்படம் தீபாவளிக்கு முன்பு ரிலீஸ் ஆகவிருந்தது. 7 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்ததால் ரிலீஸ் தள்ளி வைக்கப் பட்டது.
இந்நிலையில் இன்று 125 தியேட்டர்களில் வெளியாகிறது. இதையொட்டி நேற்று பட தரப்பினர் சார்பில் அவசர கூட்டம் நடந்தது. இதில் தியேட்டர் அதிபர்கள். நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 
மிக மிக அவசரம் படத்தை வெளியிடும் ரவீந்திரன் சந்திரசேகர் பேசும்போது,'கடந்த மாதம் 11ம் தேதி மிகமிக அவசரம் படத்தை வெளியிட முடிவு செய்தபோது 7 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தது. போதுமான தியேட்டர்கள் கிடைக்க வில்லையே என்ற மனஅழுத்தம் ஏற்பட்டது.
 
அதை நான் வெளிப்படுத்திய போது முக்கியஸ்தர்கள் ஆறுதல் கூறியதுடன் கொஞ்சம் காத்திருங்கள் நிறைய தியேட்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்றனர். அதன்படி இன்றைக்கு 125 தியேட்டரில் இப்படம் வெளியாகிறது. தியேட்டர் உரிமையா ளர்கள் வழிகாட்டுதல்படி நடந்ததால் சரியான நேரத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்து தருவார்கள் என்பதை புரிந்துகொண்டேன். அவர்களுக்கு நன்றி' என்றார்.
 
இந்த நிகழ்ச்சியில்  தியேட்டர் அதிபர்கள் அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம். தயாரிப்பளர் கே.ராஜன்.. இயக்குனர் சுரேஷ் காமாட்சி நடிகை ஸ்ரீபிரியங்கா, நடிகர் எஸ்,வி,சேகர் கலந்துகொண்டனர்.

Leave a reply