ஒரே நாளில் தர்பார் ரஜினி, இந்தியன் 2 கமல் போஸ்டரால் பரபரப்பு... சத்தமில்லாமல் அரங்கேறிய போட்டி..

by Chandru, Nov 8, 2019, 18:11 PM IST
Share Tweet Whatsapp
ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். நேற்று தர்பார் படத்தில் ரஜினி நடித்துள்ள அசத்தலான சண்டை காட்சியிலிருந்து ஸ்டைலான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதனை கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
 
அதேபோல் தெலுங்கு, மலையாளம், இந்தியில் ரஜினியின் தர்பார் போஸ்டரை முறையே மகேஷ்பாபு, மோகன்லால், சல்மான்கான் வெளியிட்டனர்.
 
இந்நிலையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்தியன் 2 வில் கமல்ஹாசன் கோட்டை மீது கம்பீரமாக கையை பின்பக்கமாக கட்டிக்கொண்டு ஊரையே உற்று பார்க்கும் அசத்தலான ஸ்டில்லை டைரக்டர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தர்பார் போஸ்டர் வெளியான அதே நாளில் கமலின் போஸ்டர் வெளியிடப் பட்டதான் மூலம் இருவருக்குமான போட்டி சத்தமில்லாமல் அரங்கேற்றப் பட்டிருக்கிறது. கமலுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக இந்த ஸ்டிலை ஷங்கர் வெளியிட்டாராம்.
இந்தியன் 2 படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் கோட்டைகள் நிறைந்த பகுதியில் நடந்தது. அப்போது கோட்டை மதில் சுவர் மீது நின்றபடி ஊரை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் கமலின் இந்த ஸ்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.  

Leave a reply