ராஷ்மிகாவை தகாத வார்த்தையில் விமர்சித்த ரசிகருக்கு கண்டிப்பு... என்னைபற்றி பேச உரிமை இல்லை...

by Chandru, Nov 8, 2019, 18:22 PM IST
Share Tweet Whatsapp
விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படம் உள்பட 3 படங்களில் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மன்தன்னா. இவர்கள் இருவருக்கும் காதல் என்று கிசுகிசுவும் உலவி வருகிறது.
அதை மறுத்திருக்கும் ராஷ்மிகா இன்னும் 2 வருடத்துக்கு விஜய் தேவரகொண்டா வுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். தற்போது சிவகார்த்தி கேயன் படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா.
 
சமீபத்தில்  ரசிகர் ஒருவர், ராஷ்மிகாவின் குழந்தை பருவ  புகைப்படங்களை வெளியிட்டு, 'யாருக்குதெரியும் இந்த சின்னப்பெண் வருங்காலத்தில் சர்வதேச அளவில் திரும்பி பார்க்கும் நடிகை ஆவார் என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தகாத வாரத்தையொன்றையும் சேர்த்திருந்தார்.  அதைக்கண்டு கோபம் அடைந்த ராஷ்மிகா அந்த ரசிகருக்கு பதிலடி தந்தார்.  
 
'நடிகை ஆவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு தகுந்த மரியாதை தர வேண்டும். சினிமா நட்சத்திரங்களுக்கு நீங்கள் செய்வது இதுதானா. இப்படி  செய்வதால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போ கிறது, நடிப்பை பற்றி என்னவேண்டுமா னாலும் சொல்லுங்கள் அதற்கு உரிமை உண்டு.
 
ஆனால் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. என்னை நீங்கள் காயப்படுத்திவிட்டீர்கள்என்றார் ராஷ்மிகா.

Leave a reply