ரொம்ப நாள் ஆச்சி மறந்தே போச்சு எமி... குழந்தையுடன் இருப்பதை கண்டு ரசிகர்கள் நலன் விசாரிப்பு...

by Chandru, Nov 8, 2019, 19:18 PM IST
Share Tweet Whatsapp

ஆர்யாவுடன் மதராசபட்டணம்  படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். அதைத் தொடர்ந்து தாண்டவம், தெறி, தங்கமகன் மற்றும் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன் ரஜினியுடன் 2.0 படத்தில் இணைந்து நடித்தார்.

அதன்பிறகு காதலன் ஜார்ஜ் பனையோயிட்டுவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இன்னும் திருமணம் ஆகாத நிலையில் எமி கர்ப்பமானார். கடந்த 2 மாதத்துக்கு முன் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்த எமி தற்போது குழந்தையை மார்போடு அணைத்தவாறு, படுத்திருநக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன் கர்ப்பிணி தோற்றத்தில் யோகாசனம் செய்வது, நீந்துவது, குதிப்பது என பல பயிற்சிகளை செய்து அதிர்ச்சி தந்துக்கொண்டிருந்த எமி, குழந்தை பெற்ற பிறகு சேட்டைகளை குறைத்துக்கொண்டார்.

அதை குறிப்பிட்டு ரொம்ப நாளாச்சி மறந்தே போச்சி எமி எப்படியிருக்கீங்க என்று ரசிகர்கள் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.


Leave a reply