ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவுடன் மோதிய தனுஷ்... இங்கிலாந்தில் பரபரப்பு காட்சி...

by Chandru, Nov 8, 2019, 19:05 PM IST
தனுஷ் நடிக்கும் புதியபடத்தை கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கி வருகிறார். கதாநாயகி யாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக் கிறார். கேங்ஸ்டர் கதையான இதனை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் தயாரிக் கிறார்.
இதில் இந்திய டானாக நடிக்கும் தனுஷ், ஐரோப்பிய டானுடன் மோதுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய டான் கேரக்டரில், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கிறார். இவர் 'பிரேவ் ஹார்ட்', 'ஹைலேண்டர்', 'வொண்டர் வுமன்', 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' உட்பட பல படங்களில் நடித்தவர்.
தனுஷ் ஜேம்ஸ் காஸ்மோ மோதிய காட்சிகள் இங்கிலாந்தில் படமானது. இதற்காக கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் உட்பட படக்குழுவினர் 70 நாட்கள் லண்டனில் முகாமிட்டிருந்தனர்.

Leave a reply