”தளபதி64”  விஜய்யோடு படம் வெளியிடுங்க... மாளவிகா மோகனனுக்கு மெசேஜ்..

by Chandru, Nov 9, 2019, 18:54 PM IST
Share Tweet Whatsapp
ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி ஆனார் மாளவிகா மோகனன். தற்போது தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து 2வது கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அங்குள்ள  கல்லூரியில் படப்பிடிப்பு நடக்கிறது.
 
ஒரு தினம் முன்பு, படப்பிடிப்புக்கு தயாராகும் போட்டோவை வெளியிட்ட மாளவிகா மோகனன் தன் இன்ஸ்டாகிராமில் அடுத்ததாக நேற்று 3ம் நாள் ஷூட்டிங் புகைப்படம் என குறிப்பிட்டு இரவு நேர போட்டோவை பகிர்ந்துள்ளார்.
தனியாக அமர்ந்திருக்கும் படத்தையும், ஹேர் ஸ்டைல் மேக்கப் படத்தையும் வெளியிட் டுள்ள மாளவிகா மோகனனிடம் தளபதி விஜய்யோடு இருக்கும் புகைப்படத்தை பகிருங்கள் என விஜய் ரசிகர்கள் கேட்டு மேசேஜுக்கு மேல் மெசேஜ் அனுப்பி வருகின்றனர்.

Leave a reply