இந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...

by Chandru, Nov 11, 2019, 17:05 PM IST

பீட்ஸா, நேரம், ஜிகர்தண்டா, இறவி, மெட்ரோ உறுமீன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா.

இவர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2ம் பாகத்தில்  இணைந்திருக்கிறார்.  இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். முதல்பாகத்தில் 2 வேடத்தில் கமல் நடித்திருந்தாலும் இரண்டாம் பாகத்தில் ஒரு வேடம் மட்டுமே ஏற்றிருக்கிறார்.

மற்றொரு வேடத்தில் சித்தார்த் நடிக்கிறார். இவர்களுடன் விவேக், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.  

முதல் பாகத்தில் நெடுமுடி வேணு நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தை இப்படத்தில் பாபி சிம்ஹா ஏற்றிருக்கிறார்.


Leave a reply