தளபதி 64-ல் இணைந்த 96 பட நடிகை.. யார் தெரியுமா?...

by Chandru, Nov 11, 2019, 16:21 PM IST

தீபாவளிக்கு திரைக்கு வந்த பிகில் படத்தையடுத்து விஜய் நடிக்கும் புதிய படம் தளபதி 64 ஆக உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இதில் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. 2ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.

பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இவர்களுடன் தற்போது மற்றொரு நடிகை கவுரி கிஷான் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இவர் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் விஜய் சேதுபதி, சாந்தனு, வர்கீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தளபதி 64 நடித்து வருகிறார்கள்.


More Cinema News

அதிகம் படித்தவை