சொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..

by Chandru, Nov 11, 2019, 16:12 PM IST
அபியும் நானும், மொழி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிருதிவிராஜ். தற்போது மலையளதில் பிஸியாக நடித்து வருகிறார். கார் பிரியரான இவர் அடிக்கடி புதிதாக சொகுசு கார்களை வாங்குவது வழக்கம்.
சமீபத்தில் இவர் 1.64 கோடி மதிப்புள்ள ல்லம்போர்கினி சொகுசு காரை வாங்கினார். அந்த காரை பதிவு செய்வதற்காக வாகன நிறுவனத்தினர் கொச்சி மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் ஆன்-லைனில் பதிவு செய்தனர். அப்போது காரின் விலையை குறைத்து 1.34 கோடி என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் உண்மையான மதிப்பு 1.64 கோடி என்பது மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர். விலையை குறைத்து காட்டியபோது முதலில் 42 லட்சத்து 42 ஆயிரம் வரி கட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 9.54 லட்சம் கூடுதலாக வரி கட்டினால் மட்டுமே காரை பதிவு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் பிரித்விராஜ் கூடுதலாக 9 லட்சத்து 54 ஆயிரத்து 350 கட்டினார். பின்னர் கொச்சி மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் காரை பதிவு செய்து கொடுத்தனர்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை