அசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா... தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ்...

by Chandru, Nov 11, 2019, 16:01 PM IST
Share Tweet Whatsapp

தனுஷ் ஜோடியாக அசுரன் படம் மூலம் தமிழில் மஞ்சுவாரியர் அறிமுகமானார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் அவர் நடித்தாலும் முதல் படமே ஹிட்டாக அமைந்தது.  

அசுரன் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில் தனுஷ் ஏற்ற வேடத்தை வெங்கடேஷ் ஏற்க உள்ளார். அதேபோல் மஞ்சுவாரியர் வேடத்தை ஸ்ரேயா ஏற்கவிருப் பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே ஸ்ரேயா தமிழில் நடித்துள்ள நரகாசூரன் படம் முடிந்து ரிலீஸுக்காக காத்திருக் கிறது. இதுதவிர தமிழ் மற்றும் இந்தியில் 2 படங்கள் நடிக்கிறார். இந்நிலையில்தான் ஸ்ரேயாவுக்கு அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது கிளாமர் இல்லாத கதாபாத்திரத்தை ஸ்ரேயா ஏற்கிறாரா, இல்லையா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.


Leave a reply