ஜெயலலிதா வாழ்க்கை பட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது....   கங்கனாவுக்கு ஹாலிவுட் மேக் அப்மேன் அலங்காரம்..

by Chandru, Nov 11, 2019, 15:33 PM IST
Share Tweet Whatsapp
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தலைவி என்ற திரைப்படம் உருவாகிறது ஏ.எல்.விஜய் இயக்கிறார்.  இப்படத்தை விப்ரி என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்காக கங்கனா ரனாவத் பரதநாட்டியம் கற்றதுடன், தமிழ்பேசவும் தீவிர பயிற்சி எடுத்து வந்தார்.  
 
இந்நிலையில், தலைவி படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. தலைவி படத்தில் கங்கனா ரனாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார். அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைத்துள்ளார்.

Leave a reply