ஆரி ஜோடியாக நெடுஞ்சாலை படத்தில் நடித்ததுடன் ஜீரோ, அதே கண்கள் படங்களில் படத்தில் நடித்தவர் ஷிவதா. தற்போது வல்லவனுக்கு வல்லவன், கட்டம், இறவாக்காலம் ஆகிய படங் களில் நடித்து வருகிறார்.
தமிழில் 2 படங்களில் நடித்ததுமே தனது நீண்ட நாள் நண்பர் முரளி கிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது
இந்நிலையில் கர்ப்பமான ஷிவதாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. ஒரு சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு ஷிவதா நடிப்புக்கு தயாராகும் விதமாக தனது தோற்றத்தை புதுப்பொலிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
பயிற்சியாளர் உதவியுடன் கடுமையான பயிற்சிகள் செய்து வருகிறார். பிரசவத்துக்கு பிறகு உடலில் போட்ட எடையை குறைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் ஷிவதா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.