அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. முதல்படத்திலேயே கார்த்திக்க. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி பெற்றச் சென்றார்.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என குறைந்த அளவே தமிழில் நடித்தார் பிரியாமணி. அப்படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து பாங்கான கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு கவர்ச்சி வேடங்களில் நடித்ததுடன், டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.
அதன்பிறகு தமிழ் படம் பக்கம் திரும்பி பார்க்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ், கன்னடத்தில் உருவான சாருலதா படத்தில் நடித்தார். இப்படம் 2012ம் ஆண்டு திரைக்கு வந்தது. தற்போது 7 வருடத்துக்கு பிறகு டாக்டர் 56 என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படமும் தமிழ், கன்னடம் என இருமொழிகளில் உருவாகிறது. நேரடி தமிழ் படத்தில் நடிக்க பிரியாமணி தயக்கம் காட்டுவது ஏன் என்று கேட்டால், தமிழில் நடித்தால் மறுபடியும் கிராமத்து பெண்ணாக்கி மேக்அப் இல்லாத வேடத்தில் நடிக்கச் சொல்வார்கள் என்ற பயம்தான் காரணம் என சிலரின் முணுமுணுப்பு கேட்கிறது.