அஜித்தின் வலிமை என்ன ஆச்சு...கால தாமதம் பற்றி ஸ்ரீதேவி கணவர் விளக்கம்

by Chandru, Nov 12, 2019, 13:58 PM IST
நேர் கொண்ட பார்வை படத்தையடுத்து அஜீத் நடிக்கும் படத்துக்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டு பூஜை போடப்பட்டது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இவர் நேர்கோண்ட பார்வை படத்தை இயக்கியவர். இப்படத்தை தயாரித்த போனிகபூரேவலிமை படத்தையும் தயாரிக்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை தொடங்கவில்லை. படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். இதையடுத்து போனிகபூர் வலிமை படம் பற்றிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.
“வலிமை படத்தில் அஜீத் வித்தியாசமாக, இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதால் அந்த கேரக்டருக் காக தன்னை தயார் செய்து வருவதாகவும், கேரக்டருக் காக தன்னை தயார் செய்து கொண்டதும் வலிமை படப்பிடிப்பு தொடங்கும்” என்றும் அறிவித்துள்ளார்.

Leave a reply