தாய்- மகளுக்கு பாலியல் தொல்லை தந்த  திமுறு நடிகர்... ஒப்புதல் வாக்குமூலத்தால் பரபரப்பு...

by Chandru, Nov 12, 2019, 14:13 PM IST
Share Tweet Whatsapp
விஷால் நடித்த திமுறு படத்தில் மாற்று திறனாளி வில்லனாக நடித்தவர் விநாயகன். சிம்பு நடித்த சிலம்பாட்டம், தனுஷ் நடித்த மரியான், உள்ளிட்ட பல  தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் மீது மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் சமீபத்தில் மீடூ புகார் கூறியிருந்ததுடன் போலீஸில் தனக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கான  ஆதாரங்களையும் அளித்தார். மேலும் தனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மிருதுளா புகாரில்  கூறியிருந்தார்.
 
இதையடுத்து விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்து போலிஸார்  விசாரணை செய்து விநாயகனை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுதலையானார். இந் நிலையில் மிருதுளாதேவிக்கும் அவரது தாயாருக்கும் பாலியல் தொல்லை அளித்தது உண்மைதான் என விநாயகன் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் டிசம்பர் மாதம்  நடக்க உள்ளது.

Leave a reply