சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை ப்ரியா ஆனந்த். இவர் அரிமா நம்பி, இரும்புகுதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இங்லிஷ் விங்லிஷ் என்ற படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்திருந்தார். இப்படத்தில் தல அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
'உங்களுக்கு மிகவும் பிடித்தவர் தல அஜித்தா? தளபதி விஜய்யா?' என்று கேட்டபோது தல அஜித் என்றார்.
இது வீடியோவாக வெளியானது. அதைக் கண்ட ரசிகர் ஒருவர் தல அஜித் பெயரை சொன்ன நடிகை பிரியாமணிக்கு வாழ்த்துக்கள் என பிரியா ஆனந்த் பெயருகு பதிலாக பிரியா மணி பெயரைக் குறிப்பிட்டார். அதைக் கண்டு ஷாக் ஆன பிரியாமணி, உடனே அவர் 'அப்படி சொன்னது நானில்லை' என பதில் அளித்தார். அதேசமய்ம் அதைக் கண்ட நடிகை பிரியா ஆனந்த், 'அப்படிச் சொன்னது நான்தான்' என ஒப்புக்கொண்டார்.
பிரபல நடிகர்களில் பிடித்தவர்கள் யார் என்று கேட்கும்போது பெரும்பாலான நடிகைகள் எல்லா நடிகர்களையும் பிடிக்கும் என்று பொதுவாக ஒரு பதிலை சொல்லி நழுவிவிடுவார்கள். ஆனால் பிரியா ஆனந்த் தல அஜீத் பிடிக்கும் என்று குறிப்பிட்டுச் சொன்னதால் அப்படி நான் சொல்லவில்லை என பிரியாமணி விளக்கம் அளித்தாராம்.