விஜய் ரசிகர்களை வம்பிழுத்த மீடு பாடகி... பலத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...

by Chandru, Nov 13, 2019, 17:32 PM IST
திரைப்பட பாடகி சின்மயி மீ டூ புகாரில் கவிஞர் வைரமுத்து பெயரை குறிப்பிட்டு அதிரடி காட்டினார். சமீபத்தில் நடந்த கமல் 60 திரையுலக விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்துவை விமர்சித்திருந்தார். தவிர இணைய தளத்தில் பெண்கள் தங்கள் மீது நடந்த பாலியல் ரீதியிலான தொல்லைபற்றி தெரிவித்தால் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். திடீரென சின்மயி விஜய் ரசிகர்கள் மீது பாயந்திருக்கிறார்.
சின் மயி பற்றி ரசிகர்கள் எப்போது என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. அதற்கு சின்மயி தடாலடியாக பதில் தந்திருக்கிறார். எதற்காக நீங்கள் கூச்சல் போடுகிறீர்கள் என்று எனக்கு எந்தக்ளுவும் கிடைக்கவில்லை. எப்படியிருந்தாலும் உங்களுக்கு ஆள் பலம், ட்ரோல்பலத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல... நீங்கள் கண்டிப்பா அத சமாளிச்சிடுவீங்க... என தெரிவித்துள்ளார்.

Leave a reply