மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஹீரோவுக்கு எதிர்ப்பு... இயக்குனர் சரண் பதில்...

by Chandru, Nov 13, 2019, 17:42 PM IST
Share Tweet Whatsapp

கடந்த 2 வருடத்துக்கு முன் வினய், சம்யுக்தா நடித்த ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கிய சரண் முன்னதாக 2004ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் இயக்கினார். தற்போது மார்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார். இதில், ஆரவ் -- காவ்யா தபார் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்திலிருந்து ஹீரோ ஆரவ் ஸ்டில் வெளியானது. அதில் அவர் ரூபாய் நோட்டு மாலை அணிந்திருந்ததுடன், தலையில்  டாஸ்மாக்  பாட்டில்களை வைத்து, கூலிங்கிளாஸ் அணிந்து வித்தியாசமாக போஸ் தந்திருந்தார். ஆரவின் இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியது. குடியை ஊக்கப்படுவதுபோலவும், பணத்தை அவமதிப்பதுபோலவும் இருப்பதாக புகார் கூறினார்.

இதற்கு பதில் அளித்துள்ள டைரக்டர் சரண், ''வில்லன் கதாபாத்திரத்தை உணர்த்த,  புகைப்பது போல, மது குடிப்பது போல படங்களில் காட்டுவது வழக்கம் தான். மேலும் ரூபாய் நோட்டு மாலை அணிவிப்பது, பல அரசியல் கட்சிகளில் வழக்கத்தில் உள்ளது,'' என்றார்.


Leave a reply