கமல்ஹாசன் தனது 65 பிறந்த நாளை குடும்பத்தினருடன் பரமகுடியில் கொண்டாடினார். அப்போது தனது தந்தையின் சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் கமல் அண்ணன் சாருஹாசன், சுகாசினி, மகள்கள் ஸ்ருதிஹாசன். அக்ஷரா ஹாசன் கலந்துகொண்டனர்.

கமல் குடும்பத்தோடு குடும்பமாக பூஜாகுமாரும் நின்றிருந்த புகைப்படம் வெளியானதிலிருந்து இதுபற்றி நெட்டில் சிலர் சர்ச்சையாக்கி வருகின்றனர். இதுபற்றி பூஜா கொஞ்சமும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அவர் இன்று தனது இணைய தள பக்கத்தில் கமல், ரஜினி இருவருக்கும் நடுவில் நிற்கும் புகைப் படத்தை வெளியிட்டிருக்கிறார்.
'ரஜினி, கமல் இரண்டு ஜாம்பவான்களிடமிருந்து இந்திய திரையுலகமே நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறது. அவர்களுடன் இருப்பதை எண்ணி மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இருவரும் நீண்ட வருடங்களாக தங்களின் உழைபை திரையுலகிற்கு தந்துக் கொண்டிருக்கின்றனர். இன்றுவரையிலும் அவர்கள் இருவரின் கடினமான உழைப்பும் வியப்பை ஏற்படுத்துகிறது' என தெரிவித்திருக்கிறார் பூஜா குமார்.