சல்மான் கானுக்கு நான் வில்லன் இல்லை...தமிழ் நடிகர் அலறல்...

by Chandru, Nov 14, 2019, 17:17 PM IST
Share Tweet Whatsapp

தமிழில் பரத் நடித்த படம் பொட்டு படத்துக்கு பிறகு புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையைில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படம் உருவாகிறது.

இதில் முக்கிய வேடத்தில் நடிக்க தேர்வானார் பரத் இதுபற்றி சமீபமாக தகவல் வெளியானது. அதில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சல்மான் கான் படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக  கூறுவதை பரத் தரப்பு மறுத்திருக்கிறது.

”போலீஸ் அதிகாரியாக சல்மான்கானுடன் முழு படத்திலும் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறேன்' என்று தெளிவு படுத்தி உள்ளார் பரத். தமிழிலும் பல படங்களில் வில்லனாக நடிக்க படத்துக்கு வாய்ப்பு வந்தபோது அவர் அதை ஏற்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply