சர்வதேச திரைப்பட விழாவில் ஆராதனா, ஷோலே திரையீடு...அமிதாப், ராஜேஷ் கண்ணாவுக்கு கவுரவம்...

by Chandru, Nov 14, 2019, 17:08 PM IST

ஆண்டுதோறும் கோவாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழா இந்த ஆண்டு வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடக்கிறது. 50வது பொன் விழா ஆண்டாக நடக்கும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

அதை ரஜினிகாந்த் நேரில் பெற்றுக் கொள்கிறார். இவ்விழாவில் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் படங்கள் திரையிடப் படுகின்றன. தாதா சாகேப் விருது பெற்ற அமிதாப்பச்சனை கவுரவிக்கும் வகையில் அவர் நடித்த 6 படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளது.

ஷோலே(1975), தீவார் (1975), பிளாக் (2005), பிகு (2015), பட்லா (2019) ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. அதேபோல் ராஜேஷ் கண்ணா, ஷர்மிளா தாகூர் நடித்த ஆராதனா படமும் திரையிடப்படுகிறது. இப்படம் 1969ம் ஆண்டு திரைக்கு வந்தது. பொன் விழா ஆண்டாக நடக்கும் திரைப்பட விழாவில் ஆராதனா படமும் வெளியாகி பொன் விழா ஆண்டு கண்டிருக்கிறது.

இதையடுத்து இப்படம் திரைப்பட விழாவில் திரையிடப் பட உள்ளது. இப்படத்தை சக்தி சமந்தா இயக்கியிருந்தார்.


Leave a reply