3 ஹீரோயினுடன் விஷாலின் சக்ரா யுவன் சங்கர் ராஜா இசை..

by Chandru, Nov 15, 2019, 15:32 PM IST
டைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, 'ஆக்‌ஷன்' படத்தில் விஷால், தமன்னா நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதியபடத்துக்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை புது இயக்குநர் ஆனந்தன் இயக்குகிறார். விஷாலுடன் ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒற்றைக்கையில் லாரி டயரில் இருக்கும் இரும்பு ரிம்மை கையில் தூக்கியபடி தாக்குதலுக்கு தயாராக நிற்கிறார் விஷால். யுவன் சங்கர் ராஜா, படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கெனவே இரும்புத்திரை, சண்டக்கோழி 2 படங்களை தொடர்ந்து மீண்டும் விஷாலின் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா சக்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளதுடன், 'இந்த லுக் விஷாலுக்கு சரியாக இருக்கிறது. சக்ரா குழுவுக்கு வாழ்த்துக்கள்' என தெரிவித்திருக்கிறார்.


More Cinema News

அதிகம் படித்தவை