சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு தடையா? பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்..

by Chandru, Nov 15, 2019, 15:39 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் ஹீரோ'. கல்யாணி பிரியதர்ஷனி கதாநாயகி. அர்ஜூன், அபய் தியோல். இவானா நடித்திருக்கின்றனர்.

பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் ஹீரோ படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்ற நடுவர் மையம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ஹீரோ திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வேறு எந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை. சமூக ஊடகங்களில் ஹீரோ பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறு.

அந்த தகவல்களில் படம் 24 ஏ.எம் புரொடக்‌ஷன்சால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே. இத்தனைக்கும் ஹீரோ படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஹீரோ திரைப்படம் பற்றி 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்தவித தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை.

ஹீரோ படத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் பிலிமிஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை ஆலோசிக்கப்படுகிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை