ஜோதிகா-கார்த்தி நடிக்கும் ”தம்பி”.. பட போஸ்டர் சூர்யா வெளியிட்டார்..

Kaarthi Jothikas Film Titled Thambi

by Chandru, Nov 15, 2019, 22:43 PM IST
சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால் அந்த வாய்ப்பு இன்னும் அமையாவிட்டாலும் தனது அண்ணியுடன் கார்த்தி நடிக்கிறார். இதில் ஜோதிகா கார்த்தியின் அக்காவாக நடிக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.
இப்படத்தை ஜீத்து ஜோஸப் இயக்கி வருகிறார். இவர் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் . வயாகம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு கோவிந்த் வசந்த் இசை அமைக்கிறார்.
த்ரில்லர் சஸ்பென்ஸ் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவ டைந்து அடுத்த மாதம் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத் தின் டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா சில மணிநேரத்துக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கி றார். படத்துக்கு 'தம்பி' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
கார்த்தி நடித்த கைதி படம் தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை மையமாக வைத்து உருவானதுபோல் இப்படம் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையிலான பாசத்தை மையமாக வைத்து உருவாகி யிருப்பதாக தெரிகிறது. சஸ்பென்ஸ் கதையென்பதால் பேய் சமாச்சரங்களும் படத்தில் இடம் பெறுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More Cinema News