சங்கத்தமிழன் ரிலீஸ் சிக்கலால் தல - தளபதி ரசிகர்கள் மோதல்... காரணம் என்ன தெரியுமா..?

by Chandru, Nov 16, 2019, 15:52 PM IST
விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'சங்கத் தமிழன்' இப்படம் இன்று வெளியாக
விருந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. நெல்லை கோர்ட்டில் அந்நகரில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் மற்றொரு பிரச்னை என்னவென்றால் சங்கத் தமிழன் தயாரித்துள்ள விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தான் அஜீத் நடித்த 'வீரம்' படத்தை தயாரித்தது. அப்படத்தில் சில வினியோகஸ்தர் களுக்குத் தர வேண்டிய வரிவிலக்குத் தொகையை படத் தயாரிப்பு நிறுவனம் தரவில்லை, அதனால்தான் 'சங்கத்தமிழன்' வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து விஜய் ரசிகர்கள், 'வீரம்' பற்றியும், அஜித் பற்றியும் நெட்டில் விமர்சித்து வருகின்றனர். 'வீரம்' படத்திற் குப் பிறகு விஜய் நடித்த 'பைரவா' படத்தை அந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. அதில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இன்று நிதிப்பிரச்சினையில் சிக்கி உள்ளார் கள் என தல ரசிகர்கள் தளபதி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் பட நிறுவனத்தினர் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் சமாதானம் எட்டப்பட்டு இன்று இரவு அல்லது நாளை சங்கத்தமிழன் ரிலீஸ்பற்றி நல்ல தகவல் கிடைக்கும் என்று பட தரப்பு தெரிவித்துள்ளது.


More Cinema News