எம்ஜிஆர் படமென்றாலே அதில் வில்லனாக நடிப்பவர் நம்பியாராகத்தான் இருப்பார் என்பது அன்றைய காலத்து ரசிகர்களின் கணிப்பு. அது நிஜமும் கூட.
எம்ஜிஆர் தேர்தலில் வெற்றி பெற்று நன்றி அறிவிப்பு கூட்டங்களில் பங்கேற்க சென்றபோது ஒரு மூதாட்டி நீ ஜெயிச்சது ரொம்ப சந்தோஷம் அந்த நம்பியார்கிட்ட மட்டும் ஜாக்கிரதையா இரு என்று சொன்னதாக கூறுவார்கள். அந்தளவுக்கு தமிழக மக்கள் மனதில் ஒரு வில்லனாக பதிந்திருந்தவர் எம்.என்.நம்பியார். சினிமாவில்தான் இவர் வில்லன் நிஜவாழ்வில் பக்திமான். அதுவும் ஐயப்ப சாமியின் தீவிர பக்தர். இவரது தலைமை யில் வருடா வருடம் சபரிமலைக்கு செல்பவர்கள் பலர் உண்டு. அமிதாப், ரஜினி போன்றவர்களும் இவருடன் சபரிமலை சென்றிருக்கிறார்கள்.
1935ம் ஆண்டு பக்த ராமதாஸ் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கத் தொடங்கி யவர் எம்.என்.நம்பியார் சுமார் ஆயிரம் படங்கள் நடித்திருக்கிறார். இதில் சிங்கள படம், ஆங்கில படமும் அடங்கும். இவர் தனது 89வது வயதில் காலமானார். தற்போது அவரது 100 ஆண்டு விழாவை அவரது வாரிசுகள் கொண்டாடுகின்றனர். நம்பியாரின் 2வது மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் இருவரும் இவ்விழாவை நடத்துகின்றனர்.
'எனது தாத்தா நம்பியார் ஆயிரம் படங்கள் நடித்திருக்கிறார். வரும் 19ம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் மாலை 6 மணிக்கு நம்பியார் 100 நிகழ்ச்சி நடக்கிறது. இசைஞானி இளையராஜா, ஓய்வு பெற்ற டிஜிபி விஜயகுமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். வீரமணி ராஜு பக்தி இசை நிகழ்ச்சி நடக் கிறது. ரஜினி காந்த், கமல், சிவகுமார், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட் டிருக்கிறது. அன்றைய தினம் அவரைப்பற்றிய குறும் படம் திரையிடப்படுகிறது.
பின்னாளில் இந்த குறும்படம் மேலும் நீட்டிக்கப்பட்டு நம்பியாரின் முழுவாழ்க்கையை சொல்வ தாக படமாக்கப்பட உள்ளது' என்றார் நம்பியாரின் பேரன் சித்தார்த்.