மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திரம் தலைவி பெயரில் திரைப்படமாகிறது.
ஏ.எல்.விஜய் டைரக்டு செய்யும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது. கங்கனா ரனாவத் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது.
இதில் பிரதானமாக எம்ஜிஆர் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. அந்த வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இதற்காக அணிவிக்கப்பட்ட மேக்அப் டெஸ்ட்டில் அவர் பாஸானார். மீசையை மழித்து, தொப்பி, கூலிங்கிளாஸ் அணிந்து எம்ஜிஆரை ஜிராக்ஸ் எடுத்ததுபோல் தோற்றம் அளித்தார் அரவிந்த்சாமி.
டெஸ்ட் ஷூட்டிற்காக எம்ஜிஆர் வேடம் போட்ட அரவிந்த்சாமியின் இயல்பான தோற்றம் தற்போது நெட்டில் வெளியாகி உள்ளது.